
நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ (Karathey Babu) திரைப்படம், தணிக்கைக் குழு பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்கிய பிறகு தணிக்கைப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 2027 பிப்ரவரி மாதம் காதலர் தின வாரத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’ (Genie) திரைப்படத்தை டிசம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பணிகள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் மற்றொரு திரைப்படத்தை டிசம்பர் 24ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும், இந்தத் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.





