Spotlightசினிமா

குற்ற வழக்கில் சிக்கும் டாக்டர் சூர்யா! ஞானவேல் இயக்கும் ‘சூர்யா 48’ படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சூர்யா 48’ திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க கருத்தை மையமாகக் கொண்ட படமாக இல்லாமல், குற்ற வழக்கை மையமாகக் கொண்ட கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், எதிர்பாராத விதமாக ஒரு குற்ற வழக்கில் அவர் சிக்கிக்கொள்வதே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சூர்யா – ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகும் எனக் கூறப்படும் ‘சூர்யா 48’ திரைப்படம், 2027 கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், கதைக்களம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Facebook Comments

Related Articles

Back to top button