Spotlightசினிமா

இசையுலகில் 15 ஆண்டுகள்! ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி தெரிவித்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப் பயணத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தனது முதல் பாடல் வெளியானதாகவும், அன்றிலிருந்து தொடங்கிய இசைப் பயணம் இன்றுவரை இடைவிடாமல் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்ததுடன், சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது எனத் தனது பயணத்தின் முக்கிய தருணங்களை அனிருத் பகிர்ந்துள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டு வெளியான ‘LIK’, ‘ஜனநாயகன்’, ‘DC’, ‘Paradise’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட படைப்புகளையும் தனது இசைப் பயணத்தின் சிறப்பான தருணங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது புதிய இசை நிறுவனமான Albuquerque Records மூலம் அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகால இசைப் பயணத்தில் தனக்கு ஆதரவளித்த இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்த அனிருத், இன்னும் பல கனவுகளை நோக்கிப் பயணிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

“15 ஆண்டுகள்… எண்ணற்ற நினைவுகள்… இன்னும் பல கனவுகள்! இது வெறும் ஆரம்பம்தான்” என்ற உணர்வுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button