
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன், தனது திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
தனது கணவருடன் தனித்தனியாக வசிப்பது குறித்து பேசிய ரம்யா கிருஷ்ணன், “நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம். ஆனால், எங்களின் வசதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இருவேறு நகரங்களில் வாழ்கிறோம். இதற்கு 100 சதவீதம் எங்களின் தொழில்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையோ சண்டையோ இல்லை என்றும், நெருங்கிய நண்பர்களாகவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரம்யா கிருஷ்ணனின் இந்தக் கருத்து, திருமண வாழ்க்கை மற்றும் தனித்தனியாக வசிப்பது குறித்த விவாதங்களுக்கு மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Facebook Comments





