
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கருணாஸ், ரித்விகா, இனியா, அருண் பாண்டியன், உமா ரியாஸ் கான், திலீபன், பாகுபலி பிரபாகர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆதார்”. ஆதார் என்ற ஒரு வார்த்தை என்னவெல்லாம் செய்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எதற்காக இந்த படத்திற்கு இப்படியொரு டைட்டில் வைத்திருக்கிறார். இந்த ஆதார், இந்த படத்தில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைப்படி,
வேலை தேடி தனது மனைவி ரித்விகாவுடன் சென்னைக்குச் செல்கிறார் கருணாஸ். அங்கு கட்டிடத் தொழிலில் பணிக்காக சேர்கின்றனர்.. ரித்விகாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார் ரித்விகா. தனது சம்பளத்தை வாங்குவதற்காக செல்லும் கருணாஸ், ரித்விகாவை பார்த்துக் கொள்கிறார் இனியா.
கருணாஸ் திரும்பி வந்து பார்க்கும் போது, அங்கு தனது மனைவியை இல்லாததால் அதிர்ச்சயடைகிறார். இனியா மருத்துவமனையின் பின்புறம் பிணமாக கிடக்கிறார். மனம் உடைந்த கருணாஸ், தனது பச்சிளங்குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுக்கிறார்.
அங்கு வழக்கை கையில் எடுத்துக் கொள்ளும் போலீஸார், தனது மனைவியின் ஆதார் கார்டை ஆதாரமாக கொடுக்கிறார்.
அதன்பிறகு தனது காணாமல் போன மனைவியை கண்டுபிடித்தாரா.? கருணாஸின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதையாக இருக்கிறது இந்த ஆதாரில்…
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் கருணாஸ். இவரது சினிமா வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படமாக நிச்சயம் ஆதார் இடம்பெற்றிருக்கும். தனது மனைவியை காணாமல் தவிக்கும் காட்சி ஒவ்வொன்றிலும் நம் கண்முன்னே அந்த வலியை எடுத்து வந்து நம்மை பிரம்மிக்க வைத்திருக்கிறார். ஒரு நடிப்பு பட்டறையின் குருவாக தோன்றி நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார் கருணாஸ். இப்படியான கேரக்டர்களில் தோன்றி பல படங்களில் நடித்து ரசிகர்களை ரசிக்க வையுங்கள் லொடுக்கு பாண்டி அவர்களே…
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் எதுவாயினும் அதை பெர்ஃபெக்டாக செய்து முடிப்பவர் ரித்விகா. இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும், இப்படத்தின் மூலம் ரித்விகா ஒருபடி மேலே சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பா ரஞ்சித்தின் பட்டறையோ என்னவோ நடிப்பில் அப்படியான முதிர்ச்சி.
ஏனைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இனியா, உமா ரியாஸ் கான், அருண்பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் படத்தின் கேரக்டர்களாக மாறி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கான உயிரோட்டங்கள். படத்தின் கதை தனித்துவமாக இருந்ததால், படத்தின் மீதான ஈர்ப்பு முதலிலே நமக்கு ஒட்டிக் கொள்கிறது. முக்கியமான கதையை கையில் எடுத்து தைரியமாக அதை படமாக்கிய இயக்குனருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
ஆதார் – வலி



