
முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள உணர்வுபூர்வ திரைப்படமான ‘ஆலி’, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய சிந்தனைகளில் உருவாகும் திரைப்படங்களும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தனித்துவமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள படைப்பாக ‘ஆலி’ உருவாகியுள்ளது.
கதை
தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதை, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. காதல், குடும்பம், மதம், கலாச்சாரம், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது. மதம் மற்றும் ஜாதி எல்லைகளைத் தாண்டி நடைபெறும் கதாநாயகியின் திருமணமே படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டமாக அமைகிறது.

நடிகர்கள்
பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு
இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன். பெண் இயக்குநரான இவர், படத்தின் பாடல்களையும் எழுதியுள்ளார்.
மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

- ஒளிப்பதிவு – ரினாஸ் நாசர்
- படத்தொகுப்பு – அபு ஜியாத்
- இசை – ராமவர்மா தம்புரான், சுரேஷ், ரத்தீஷ் ராய், ஆர்.ஆர். பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி
- அரபி மற்றும் இந்திப் பாடல்களுக்கு இசை – ரத்தீஷ் ராய்
- பின்னணிப் பாடகர்கள் – ஹுசைன், சம்பத், அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ்
- ஒலியமைப்பு (SFS) – என். ஷாபு செருவல்லூர்
- DI – சஜய் சி.ஆர்.
- நடன அமைப்பு – அதுல் ராதாகிருஷ்ணன், சுனிதா நோயல் ஹாய்
- கலை இயக்கம் – அகிலேஷ், ஷிஜு அபாஸ்கர்
- தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – ஸ்ரீதர்

புதிய சிந்தனை, உணர்வுபூர்வமான கதைக்களம் மற்றும் திறமையான புதிய கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘ஆலி’, தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பில், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





