Spotlightசினிமா

பாசத்தையும் அன்பையும் விளக்கும் “ஆறா”.. விரைவில் திரையில்!!

கைமையை சொல்லி பிள்ளைகளை வளர்க்காமல் அன்பை ஊட்டி பிள்ளைகளை வளருங்கள் என்ற கருத்தையும் தந்தை மகனுக்கும் உள்ள பாசப்போராட்டத்தையும் வலியுறுத்தும் ஒரு குடும்ப பாங்கான கதை ஆறா.

பரத் பவி மூவீஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் சாரங்கபாணி இயக்கியுள்ளார்.

பரத் கதாநாயகனாகவும், கேரள வரவு பவித்ரா கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர். டிக் டாக் மூலம் பிரபலமடைந்து வரும் சாதனா, ரமேஷ், ஸ்கெட்ச் கார்த்திக், பிரியங்கா ஆகியோருடன் சுரேஷ், ஜெயஸ்ரீ, முத்துசாமி, சையது,கலை போன்ற வளர்ந்து வரும் திரை நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

இசை – ஸ்பர்ஜன் பால்,

பாடல்கள் – மணியமுதன், முத்து வெங்கட், ,வெற்றி

நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா

தயாரிப்பு – பகவதி

கதை திரைக்கதை வசனம்
ஒளிப்பதிவு இயக்கம்-
வெற்றிவேல் சாரங்கபாணி

சாத்தூர், விருதுநகர், ஓடப்பட்டி, இருக்கன்குடி, ஏழாயிரம் பண்ணை போன்ற இடங்களில் 40 நாட்களில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

படத்தில் 4 பாடல்களும், 3 சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பிள்ளையைவிட்டு போகாதீங்க என் உயிரே நீங்கப்பா
உங்களை போல அன்புகாட்ட எனக்கு யாரும் இல்லப்பா என்ற மனதை வருடும் பாடலை கேட்போர் நெஞ்சங்களை கரைய வைக்கும்.

Facebook Comments

Related Articles

Back to top button