Spotlightசினிமா

தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரன் முஜீப் நடிக்கும் ’மஞ்ச சட்ட பச்ச சட்ட’!

டிகர் முஜீப், இயக்குநர் தம்பா குட்டி பம்ப்ரோஸ்கி இயக்கத்தில் உருவாகி வரும் “மஞ்ச சட்ட பச்ச சட்ட” எனும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். தஞ்சை மண்ணிலிருந்து திரைக்களம் புகுந்திருக்கும் இவர் ஏற்கனவே விலாசம், மசாலாபடம், முதல் தகவல் அறிக்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் AK திருமுருகன் இயக்கிவரும் பெயரிடப்படாத தமிழ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மலையாள மொழியை சரளமாக பேசும் முஜீப்பிற்கு மலையாள திரையுலகிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்கவேண்டும் என்ற வேட்கையோடு உழைத்து வரும் இவருக்கு திரையுலகம் பெருவாரியான வாய்ப்புகளை வாரி வழங்க காத்திருக்கிறது என்பதை காண முடிகிறது. அதற்கான முன்னோட்டம் அவரது முயற்சிகளிலும் பயிற்சிகளிலும் தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button