
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர் ‘பேட்ட’. சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரில் ரஜினியின் ஸ்டைல் லுக்கை பார்க்கும் போது ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.
சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=6QS5veNk-gIb
Facebook Comments