
தயாரிப்பாளர் S.லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள “காரி” திரைப்படத்தை, இயக்குநர் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ளார். சென்னையில் ஒரு குதிரை ஜாக்கியின் வாழ்க்கையை விதி எப்படி ராமநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறது, விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை சுற்றி நடக்க கூடிய விசயங்களை பற்றி இப்படம் பேசுகிறது.
காரி படத்தில் M. சசிகுமார், பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகிநீடு, ராம்குமார் கணேசன், சம்யுக்தா, பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., “ஜீ5 தளத்தில், பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதும் மேலும் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அவர்களின் மண் சார்ந்த கதைகளை வழங்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். கிராமப்புற கதையில் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான யானைக்குப் பிறகு, எங்களின் அடுத்த விருந்தாக காரி திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆக்ஷன் த்ரில்லர் கலந்த கிராமிய கதை, கண்டிப்பாக அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் லஷ்மன்குமார் கூறுகையில்..
“அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அருமையான படைப்பு இது. மனித உணர்வுகள், வலி, காதல், துரோகம் மற்றும் தியாகம் அனைத்தும் இருக்கும் இந்த கதை, ரோலர் கோஸ்டரில் பயணம் செய்யும் வகையிலான திரைக்கதையுடன் அற்புதமான ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. உங்களுக்குப் பிடித்தமான நட்சத்திர நடிகர்களின் கூட்டணியுடன், காரியில் நேரடியான ஜல்லிக்கட்டு, கார்ப்பரேட் பேராசை மற்றும் விலங்குகள் மீது எங்களின் தீராத அன்பு ஆகியவையும் நிரம்பியுள்ளன. இப்படம் விரைவில் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஜீ5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.” என்றார்.
ZEE5 இல் பிரத்தியேகமாக டிசம்பர் 23 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.





