Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதியுதவி; சிவக்குமார் குடும்பத்தினர் வழங்கினர்!!

ந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. பல உயிர்கள் இந்த கொடூர நோய்க்கு பலியாகி வருகிறது.

தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக மக்கள் நிதியுதவி தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ₹1 கோடி நிதியுதவியை நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அளித்தனர்.

சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு நிதியுதவியையும் அளித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button