Spotlightசினிமா

’வாடிவாசல்’ ஆட்டத்துக்கு தயாரான சூர்யா & வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் கடந்து மாபெரும் வெற்றி பெற்றபடம் தான் ‘அசுரன்’.

இப்படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன்.

கலைப்புலி எஸ் தாணுவே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் இப்படத்திற்கு ‘வாடிவாசல்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அசுரன் படத்திற்கு இசையமைத்த ஜி வி பிரகாஷ்குமார் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார்.

இதுவும் ஒரு நாவலை தழுவி தான் உருவாக்கப்படவிருக்கிறதாம். இதன் அடுத்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button