
திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷால், நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வென்று அரியணை ஏறியவர்.
அதுமட்டுமல்லாமல், நலத்திட்ட உதவிகள் பலவற்றை தனது ரசிகர் மன்றம் மூலமாக தொடர்ந்து செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கிலும் ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை ரசிகர்கள் மூலம் செய்து வந்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவருடைய வட்டாரத்திலும், தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார் விஷால்.
விரைவில் இதுகுறித்து முடிவு அறிவிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments