
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வந்த விவேக் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம்.
உடனே அவரை சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது மக்கள் தொடர்பாளர் கூறுகையில், ‘ விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை தான். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் சுயநினைவோடு உள்ளார்.” என்று கூறியுள்ளார்.
நடிகர் விவேக் மீண்டும் எழுந்து வர அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்விட் செய்து வேண்டி வருகின்றனர்.
Facebook Comments