
அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஷ்வினும் புகழும் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது.
படத்தை ட்ரெடைன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் தான் அஷ்வின் மற்றும் புகழ்.
இவர்கள் இருவரும் நடிக்க படத்தை இயக்கவிருக்கிறார் ஹரிஹரன். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதுகுறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் குறித்து Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் கூறியதாவது….
Trident Arts நிறுவனத்தில் எப்பொழுதும் புது விதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம். இயக்குனர் ஹரிஹரன், இந்த கதையை விவரிக்கும் போது காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிந்தது. இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப்பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டுவருவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படபிடிப்பை மே மாத இறுதியில் தொடங்கவுள்ளோம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்.
அஷ்வினுக்கும் புகழுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




