
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஷாலு. இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.
ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இதற்காக ஷாலுவை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் கூறியுள்ளார்.
இயக்குனர் ஆசைக்கு இணங்காததால் நடிகர் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் ஷாலு கூறினார். இந்த செய்தியை ஷாலு தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார்.
யார் அந்த இயக்குனர் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





