Spotlightசினிமா

வீறு கொண்டு எழும் தமிழர் வரலாறு… ஆதிச்சநல்லூரில் அடுத்தடுத்து முதுமக்கள் தாழி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மே 25 ஆம் தேதி மாநில அரசு சார்பில் முதல் கட்ட அகழ்வாய்வு பணி துவங்கியது.

தற்போது 4 குழிகள் அமைக்கப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தாழிகளால் சமூக ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் வரலாறு விரைவில் உலகறியும் என்றும் அவர்கள் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close