Spotlightசினிமா

வலிமையான தெய்வம் தான் “ஐமா”… விரைவில் திரையில்!

மா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ராகுல்.ஆர். கிருஷ்ணா.

எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ஐமா.

துரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ஐமா திரைப்படம் எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு. இது தான் படத்தின் ஒன்லைன்.

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா.இவர் தமிழ்,மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார் .

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகன் யூனஸ்,
கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் கே.ஆர். ராகுல். இத்திரைப்படத்தில் பாடல் வரிகளை தமிழ் புதுகவிஞர் பாடலாசிரியர் அருண்மணியன் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு செய்துள்ளவர் விஷ்ணு கண்ணன். படத்தொகுப்பு அருண் ராகவ்.

இந்த திரில்லர் திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உண்டு. சண்டைப் பயிற்சி அஷ்ரப் குருக்கள், கலை இயக்குனர் ஜீமோன் செய்துள்ளனர்

இதன் படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button