Spotlightசினிமா

13 கிலோ எடை குறைத்து மின்னும் பிக் பாஸ் புகழ் ‘ஐஸ்வர்யா தத்தா’!

தாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

திரைத்துறை மீதான காதல் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக SSHHH படத்தில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் தன்மைக்காக 13 கிலோ உடல் எடையினை குறைத்து புத்தம் புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார்.

பிக்பாஸ் மூலம் புகழடைந்த அவர், தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, PUPG, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் மற்றும் மிளிர் முதலான படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் தன் திரைவாழ்வின் முக்கியமான படங்களாக, திருப்புமுனை தருமென பெரும் நம்பிக்கையில் உள்ளார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close