Spotlightசினிமா

அஜித்தின் நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி வெளியானது!

 

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் நடித்து வரும் இந்தபடத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் பி ஆர் ஓ-வான சுரேஷ் சந்திரா சற்று நேரத்திற்கு முன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button