
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் அஜ்மல்.
மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
Rowdy Pictures சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார். கிரிஷ் இசையமைக்க, R D ராஜாசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
Facebook Comments