Uncategorized

அமேசான் ப்ரைம் வீடியோ “புத்தம் புது காலை விடியாத” என்ற தொகுப்பின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது!!

மேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான Putham Pudhu Kaalai Vidiyaadhaa… படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது

5 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொகுப்பு பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் வெளியாகவுள்ளது

கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், மேலும் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோரால் அவை இயக்கப்பட்டுள்ளன

மும்பை, இந்தியா – 4 ஜனவரி 2021 – மனதைக் கவரும் கதைகளின் அழகான தொகுப்பாகத் திகழும் தனது வரவிருக்கும் திரைப்படம் Putham Pudhu Kaalai Vidiyaadhaa….படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த 5-அத்தியாயங்களின் தொகுப்பானது, தொற்றுநோயின் இரண்டாம் கட்டத்தில் தேசத்தை வாட்டி வதைத்த துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் மனித உத்வேகம் ஆகியவற்றின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது. 5 வெவ்வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்ட Putham Pudhu Kaalai Vidiyaadhaa…வின் ஒவ்வொரு கதையும்… நட்சத்திரங்கள் நிறைந்த நடிகர்களுடன், தனித்துவமான குரல் மற்றும் திரைப்படத் தயாரிப்பின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் ஜனவரி 14 அன்று பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படவுள்ளது.

Putham Pudhu Kaalai Vidiyaadhaa… கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது லாக்டவுனில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் மற்றும் சவால்களின் பொதுவான தன்மையால் ஒன்றாக இணைக்கப்பட்ட 5 தனித்துவமான அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பும் – முகக்கவச முத்தம், லோனர்ஸ், நிழல் தரும் இதம், தி மாஸ்க், மௌனமே பார்வையாய் ஆகியவை நெகிழ்ச்சி மற்றும் மனச்சோர்வின் உணர்வை அழகாகத் தெரிவித்து, நம்பிக்கையின் கீற்றுடன், புதிய விடியலை நோக்கி நம்மை பயணிக்கச் செய்கிறது.

இயக்குநர்களின் கருத்துகள்

முகக்கவச முத்தத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் அவர்கள், “முககவச முத்தம், தொற்றுநோயால் சிதைந்த காதல் மற்றும் ஏக்கம் ஆகிய இரண்டு அடிப்படை உணர்வுகளை ஒன்றாக இணைத்துள்ளது. கௌரி மற்றும் டீஜேயின் கதாபாத்திரங்கள் மூலம், கடினமான நேரங்களிலும் காதலுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், நாம் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். இது உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் தொடர்புபடுத்தும் ஒரு கதை, அமேசான் பிரைம் வீடியோவில் பிரீமியருக்குப் பிறகு பார்வையாளர்களின் வரவேற்பினைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

லோனர்ஸின் இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள், “தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் நம்மை மிகவும் எதிர்பாராத இடங்களில் தொடர்புகளையும் ஆதரவையும் கண்டுபிடிக்க எப்படித் தள்ளியது என்பதுதான் எனது கதை. குறிப்பாக தனியாக இருக்கும் போது திடமாக இருப்பது. லோனர்ஸ் இரண்டு அற்புதமான நடிகர்களான லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் இதயத்தை கவர்ந்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோவில் இந்த உற்சாகமான கதைகளை ரசிக்க முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

மௌனமே பார்வையாய் படத்தின் இயக்குனர் மதுமிதா கூறுகையில், “இந்த இரண்டு வருட லாக்டவுன்கள் மற்றும் தனிமைப்படுத்தல்கள், உறவுகள் குறித்த நமது முன்னோக்கை மதிப்பிடச் செய்யவும், மறு மதிப்பீடு செய்யவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. நதியா மொய்து மற்றும் ஜோஜு ஜார்ஜ் இருவரும் தனியாக வாழும் நடுத்தர வயது தம்பதிகளுக்கு இடையேயான உறவு குறித்த எனது கண்ணோட்டத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. குரலுக்குப் பின்னால் இருப்பவர்கள், வாழ்க்கையின் அன்றாடத் சிக்கல்கள் காரணமாக பின்னணியில் மங்கிப் போகின்றனர். இந்த உறுதியானது நிச்சயமற்ற எதிர்காலத்தால் எதிர்கொள்ளப்படும்போது நாம் என்ன செய்வது? அமேசான் பிரைம் வீடியோவில் அதன் உலகளாவிய அறிமுகம் மூலம் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு எனது பார்வையை முன்வைக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

நிழல் தரும் இதம் படத்தின் இயக்குனர் ரிச்சர்ட் ஆண்டனி அவர்கள், “ஐஸ்வர்யாவின் கதை, அவர் ஒரு தன்னைக் கண்டறியும் உள்நோக்கிய பயணத்தின்போது சந்திக்கும் உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டரின் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்கும்போதும் தொற்றுநோய் அவரது கதாபாத்திரத்திற்கு எத்தகைய பின்னணியை ஏற்படுத்துகின்றன என்பது குறித்ததாகும். இந்த பரபரப்பான காலங்கள் பலருக்கு மிகவும் கடினமாக இருந்தது மற்றும் பார்வையாளர்கள் அவரது உணர்வுகளை மிக நெருக்கமாக உணருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அமேசான் பிரைம் வீடியோவில் இந்தத் தொடர் திரையிடப்படும்போது, உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களின் வரவேற்பினை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்

தி மாஸ்க் படத்தின் இயக்குனர் சூர்யா கிருஷ்ணா, “தி மாஸ்க்கில், தொற்றுநோய் நம்மை தனித்துவமான சூழ்நிலைகளில் தள்ளியுள்ளது என்பதையும், சில சமயங்களில், அது நேர்மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நமக்கு உதவியது என்பதையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன், அல்லது அப்படித்தான் சூழ்நிலைக்கு மத்தியில் நம்பிக்கையை உருவாக்கிடும் வகையில் அதை வெளிப்படுத்த விரும்பினேன். சனந்த் மற்றும் திலீப்பின் கதாப்பாத்திரங்கள் ஒரு மாறுபட்ட சந்திப்பைக் கொண்டுள்ளன, இந்த கோவிட் நோயின் விளைவு மற்றும் அதன் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகளை இது வெளிப்படுத்துகிறது. அமேசான் பிரைம் வீடியோ மூலம் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதையை என்னால் கொண்டு செல்ல முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்கள் அதை ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன்” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button