
த ஸ்டீலர், படத்தை இயக்கி இருப்பவர் திரு.ஜெகதீஸ் கண்ணா, இவர் இயக்குனர் ராஜிவ் மேனனின் உதவி இயக்குனராக இருந்தவர். இதற்கு முன் ஜகதீஸ் மேடை நாடக நடிகராகவும், “நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்ல” மற்றும் “திரைகடல்” படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆவார். இவர் நாடகக்கலை மூலம் வானியல் மற்றும் விமான அறிவியலை கற்பிக்கும் நிறுவனமான “வாயு-சாஸ்திரா”வின் இயக்குனர் ஆவார்.
2017 முதல் ஜெகதீஸ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை கூறி முயற்சி செய்தவாறு இருக்க, நடிகர்கள் தேதிகள் இருந்தும் திரைக்கதவுகள் திறக்காமல் தள்ளிக்கொண்டே போக, தானே சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்க முடிவு செய்து ஒரு கதை எழுதினார். அதுவே “ஸ்டீலர்”.
தன் வாழ்வில் நடந்த “லேப்டாப் திருட்டு” சம்பவத்தை மையாக வைத்து எழுதிய கதை, திருட்டு நடந்த நேரம் எட்டு நண்பர்கள் வீட்டில் இருந்தனர். போலீஸ் எட்டு பேரையும் விசாரிக்க. அதை பார்த்த ஜெகதீஸ் மனதில் கதையின் கரு உருவானது. அச்சம்வத்தை ஒரு கார்பரேட் அலுவகத்தில் நடப்பது போல் மாற்றி, ரோசமோன் படம் போல் “பெர்ஸ்பெக்டிவ்” திரைக்கதை வடிவில் இப்படத்தை தயாரித்து முடித்தார் ஜெகதீஸ்.
தன் நண்பர்கள் “மாஸ்டர்” “டாக்டர்” புகழ் பியான் சரோ, மற்றும் துப்பறிவாளன், சைக்கோ படத்தின் எடிட்டர் “அருண்” இசை மற்றும் எடிட்டிங்கில் உதவியிருக்கிறார்கள். மேடை நாடக துறை சார்ந்ததால் திறமை வாய்ந்த நடிகர்கள் “விக்னேஸ், சிவா, கோபினாத், பொன்னி, ஶ்ரீனிவாஸ், ஹர்சிதா.. மேலும் பலர் சிறம்மின்றி கிடைத்தனர். தனது ஆபிஸில் முழு படத்தை எடுக்க ஐஐடி ரிசர்ச் பார்க்கும் உதவி செய்ய, முழு படத்தையும் முடித்தார். போஸ்ட் புரொட்க்சன் வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது.
படம் முடிந்து ரிலீஸ் சம்மந்தமாக நிறைய புரொடக்சன்களை கேட்டு 4-5 மாதங்கள் கடக்க இறுதியில் தானே தனது வாயுசாஸ்த்திரா சேனலில் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார். டிரைலர் மக்களை போய் சேர்ந்தவரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.