Spotlightசினிமா

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ மூலமாக அநீதியை தட்டிக் கேட்க வருகிறார் சத்யராஜ்!

 

அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் இன்றுமுதல் துவங்கப்படுகிறது ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தில் சத்யராஜ் நடித்து வருகிறார்.

” சத்யராஜ் சாரின் உழைப்பு எங்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தது. தன் கலையின் மீது அவருக்கு இருக்கும் அற்பணிப்பே அவரின் ஒட்டு மொத்த உழைப்பையும் கேட்கிறது. ஒரு தயாரிப்பாளராக இருப்பதைவிட , இத்திரைப்படத்தை அவருடன் பணியாற்றுவதற்கான மிகப்பெரிய அனுபவமாகவே பார்க்கிறேன். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார் படத்தின் தயாரிப்பாளர் சாஜீவ்.

புதுமுக இயக்குனர் தீரன் கூறுகையில், “சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ” வெட்னஸ்டே” பட பாணியில் இருக்கும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் , அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் , கோடைவிடுமுறையில்( ஏப்ரல்-மே) திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இத்திரைப்படத்திருக்கு அஞ்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மான்ஸ்ட்ரோ 8k விஸ்டா விஷன் வெப்போன் 8 k ஹீலியம் கேமரா சாதனங்கள் முதல் முறையாக இந்த படத்துக்காக பயன்படுத்துவது இதுவே முதல் முறை. படத்தொகுப்பை கவனிக்கிறார் சரத். இவர் எடிட்டர் ரூபன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ் சுப்பாராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ” யாமிருக்க பயமேன்” புகழ் பிரசாத் இசையமைக்க , ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close