
ஐபிஎல் 2019 போட்டியின் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டிவிட்டோம் என்றே சொல்லலாம்.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் முதல் பிளே ஆஃப் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த தொடரில் சிஎஸ்கே அணியை இரண்டு முறை மும்பை அணி வீழ்த்தியுள்ளதால் அந்த அணி புதிய தெம்புடன் காணப்படும். அதே நிலையில் இன்றைய போட்டியில் வென்று இரண்டு தோல்விகளுக்கு பழி வாங்குவதோடு, நேரடியாக இறுதி போட்டியில் தகுதி பெற தோனியின் சிஎஸ்கே டீமும் முழு முயற்சியில் இறங்கும்.
அதேபோல் மும்பை அணியின் மொத்த டீமும் நல்ல ஃபார்மில் உள்ளது. குறிப்பாக ரோஹித்சர்மாவின் கேப்டன்ஷிப், ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பேட்டிங், மலிங்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சு ஆகியவை இந்த அணிக்கு சாதகமாக உள்ளது.
இருப்பினும் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டமோ, அந்த அணிதான் வெற்றி பெறும். எனவே இன்றைய வெற்றி யாருக்கு? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்





