
ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தொடர் தான் “ஆன்யா’ஸ் டுட்டோரியல்”. நிவேதிதா சதீஷ், ரெஜினா நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹாரர் தொடர் இதுவாகும்.
கதைப்படி,
கொரோனா காலத்தில், தன் வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது அக்கா ரெஜினா மற்றும் அம்மாவை விட்டு தனியாக ஒரு அபார்ட்மெண்டில் குடியேறுகிறார் நிவேதிதா.
லாக்டவுன் போடப்பட்டதால் எவரும் எங்கும் செல்ல முடியாத சூழல்.
அங்கு, நிவேதிதா அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார்.
அவர் வீட்டில்
பயமுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க தொடங்குகிறது.
அதன்பிறகு, நிவேதிதா வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
நிவேதிதா தான் கதையின் நாயகியாக வந்து நிற்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரம் என்றாலும், தனக்கான ரோலை தனித்துவமாக செய்து கொடுத்திருக்கிறார்.
நிவேதிதா தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட பல இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தெளிவாக பயன்படுத்திருக்கிறார்.
வழக்கமான ஹாரர் கதை தான் என்பதால் பெரிதான ஒரு ஈர்ப்பை இப்படம் ஒரு இடத்திலும் கொடுக்கவில்லை..
பின்னணி இசை மற்றும் வி எஃப் எக்ஸ் பணிகள் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
ஹாரர் காதலர்களுக்கு இப்படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட் படமாக நிச்சயம் இப்படம் இருக்கும்.