Spotlightசினிமா

ரஜினியை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்…. விரைவில் அறிவிப்பு.?

தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வருகிறது ‘சர்கார்’. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்க்கக் கூடிய படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தினை தொடர்ந்து ரஜினியோடு சேர்ந்து ஒரு படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

”சர்கார்” படத்தின் வேலைகள் முடிந்ததும் அதை கையில் எடுக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிகிறது. ரஜினியும் கார்த்தி சுப்பராஜ் படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்தப்படத்திலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரது ஆர்வமும் உடனடியாக இப்படத்தை கையில் எடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது லைகா நிறுவனம் இரண்டில் ஒன்று தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இரு நிறுவனங்களில் பெரும்பாலும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் தற்போது கூறப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button