Spotlightசினிமாவிமர்சனங்கள்

அருவா சண்ட – விமர்சனம் 2.5/5

யக்குனர் ஆதிராஜா இயக்கத்தில் ராஜா, செளந்தர்ராஜா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, மாளவிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் அருவா சண்ட.

கதைப்படி,

நாயகன் ராஜாவிற்கு சிறு வயது முதலே கபாடியில் மிகப்பெரும் வீரனாக வர வேண்டும் என்று ஆசை. அவரது கனவை நனவாக்க தாயார் சரண்யா பொன்வண்ணன் அவருக்கு ஒரு தூணாக நிற்கிறார்.

நண்பர்களோடு சேர்ந்து தனது கிராமத்தில் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த ராஜாவை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாயகி மாளவிகா. இதனால், இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.

தனது சாதி பெண்ணை வேற்று சாதி வாலிபன் காதலிப்பதை அறிந்து அந்த வாலிபனின் கையை துண்டித்தவர் மாளவிகாவின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன். அந்த அளவிற்கு தனது சாதியை தூக்கிக் கொண்டு வாழ்பவர் நரேன். தனது மாமன் நரேனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக அரிவாளை தூக்கிக் கொண்டு நிற்பவர் செளந்தர்ராஜா.

கபடி போட்டியில் செளந்தர்ராஜாவின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் ராஜா.

இறுதியின் வேறுவேறு சமுதாயத்தைச் சேர்ந்த ராஜா – மாளவிகா இருவரின் காதல் கைகூடியதா.? சாதிப் பெருமையை தூக்கிச் சுமக்கும் நரேன் மற்றும் செளந்தர்ராஜா திருந்தினார்களா.? என்பதே படத்தின் மீதிக் கதை

நாயகன் ராஜா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு கொடுத்து அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் இன்னும் கூடுதல் பயிற்சி வேண்டும் நாயகரே.. கபாடி போட்டி காட்சிகளில் மிரட்டுகிறார்.

நாயகி மாளவிகா, பல இடங்களில் நடிப்பது அப்படியே வெளிச்சமாக தெரிகிறது. உயிரோட்டமான நடிப்பு பல இடங்களில் மிஸ்ஸிங்க் தான்.

வழக்கம்போ, தனது அனுபவ நடிப்பில் அசரடித்திருக்கிறார் ஆடுகளம் நரேன் மற்றும் செளந்தர்ராஜா. தாயாக சரண்யா பொன்வண்ணன், எப்போதும் கொடுக்கும் நடிப்பை தான் இப்படத்திலும் கொடுத்திருக்கிறார்.

இரு பிரிவு சாதி மக்கள், அதில் காதலர்கள், எதிர்ப்பு, காதலனின் லட்சியம், க்ளைமாக்ஸ் என வழக்கமான சாதிய படமாகவே இப்படமும் நகர்ந்து செல்கிறது.

சற்று தனித்துவமான முத்திரை பதிக்கக்கூடிய கதையை கொடுத்து இன்னும் அழுத்தமாகவே தனது சாட்டையை இயக்குனர் வீசியிருக்கலாம்…

ஆங்காங்கே படத்தில் எட்டிப்பார்த்த சீரியல் போன்ற காட்சியை சற்று தவிர்த்திருக்கலாம் இயக்குனரே…

தரண் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசையில் பார்வையாளர்களை ஆட்கொள்கிறார். சந்தோஷ் பாண்டியின் ஒளிப்பதிவில் கபாடி போட்டி காட்சிகள் அசத்தல்.

இருந்தாலும், சமகாலத்தில் ஆங்காங்கே கிராமங்களில் நடந்து வரும் சம்பவத்தை கண்முன்னே நிறுத்தியதற்காக இயக்குனர் ஆதிராஜாவை வெகுவாகவே பாராட்டலாம்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close