Spotlightசினிமா

ஆர்யாவிற்கு மீண்டும் வாழ்வு தருமா கேப்டன் ?

சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி வருகிறது “கேப்டன்”.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் எப்போதுமே தனது படைப்பை வித்தியாசமாய் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடையவர்.

அந்த வரிசையில், அவர் இயக்கிய மிருதன், டெடி, டிக் டிக் டிக் போன்ற படங்கள் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

பா இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் தான் “சர்பட்டா பரம்பரை”. இப்படம் ஆர்யாவின் வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இனி தொடர்ந்து ஆர்யாவிற்கு ஏறுமுகம் தான் என்று சொல்லி முடிப்பதற்குள் வெளிவந்த திரைப்படம் ” அரண்மணை 3″.

இப்படத்தில் ஆர்யாவுக்கு பெரிதான ஸ்கோப் கொடுக்கப்படவில்லை. எதற்காக இப்படத்தில் ஆர்யா நடிக்க ஒப்புக் கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் நெட்டிசன்களால் ஆர்யா பெரிதும் கலாய்க்கப்பட்டார்.

சர்பட்டா மாதிரியான படங்களில் நடித்த எந்த ஒரு நாயகனும் தங்களது அடுத்த படத்தின் கதையை மிகவும் கவனமாக கையாண்டு தேர்ந்தெடுப்பர். ஆனால், ஆர்யா அரண்மணை 3 படத்தில் நடித்து அனைவரின் எதிர்பார்ப்பினையும் தவிடுபொடியாக்கினார்.

கேப்டன் என்ற பிரம்மாண்டமான டைட்டிலை கொண்டுள்ள இப்படம், ஆர்யாவிற்கு மீண்டும் ஒரு ஏணியாக அமையட்டும்.

Facebook Comments

Related Articles

Back to top button