Spotlightசினிமா

சபரி – விமர்சனம் 2.75/5

ANIL KATZ இயக்கத்தில் வரலக்‌ஷமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷாங் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் சபரி.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கோபி சுந்தர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராகுல் ஸ்ரீவத்சவ், நானி. படத்தொகுப்பு: தர்மேந்திரா கக்கராலா

தயாரித்திருக்கிறார் மகேந்திர நாத் கொண்ட்லா.

கதைக்குள் சென்று விடலாம்..

சிறு வயதிலேயே தாயை இழந்து விட்டதால், தாய் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கிறார் வரலக்‌ஷ்மி.

கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. வருடங்கள் செல்ல, கணேஷ் வெங்கட்ராமன் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது வரலக்‌ஷ்மிக்கு தெரிய வருகிறது.

இதனால், இருவரும் பிரிந்து விடுகிறார்கள். குழந்தையை வரலக்‌ஷ்மி தனியாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், தன்னுடன் இருக்கும் குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்றும், பிறக்கும் போதே தனக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டது என்றும் வரலக்‌ஷ்மிக்கு தெரிய வர அதிர்ச்சியாகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் வரலக்‌ஷ்மி மீதே பயணப்படுகிறது. மொத்த கதையும் தாங்கிச் செல்கிறார். தனது தாயை நினைத்து ஏங்கும் இடமாக இருக்கட்டும், குழந்தையை பிரிந்து இருக்கும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

தனது கண் பார்வையால் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் மைம் கோபி.

ரிச் லுக்கில் தனது கேரக்டரை மிரட்டியிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

ஆனால், கதையில் பெரிதான ஈர்ப்பு இல்லாததால் கதாபாத்திரங்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.

பார்த்து பார்த்து அலுத்துப் போன கதையே மீண்டும் வந்திருப்பதால், படம் பார்ப்பவர்களை சற்று தொய்வடைய வைத்துவிட்டார் இயக்குனர்.

இசை பெரிதாக கவரவில்லை. ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.

சபரி – வலுவில்லாத கதை…

Facebook Comments

Related Articles

Back to top button