Spotlightசினிமா

என் உயிருக்கு ஆபத்து; அசுரன் நாயகிக்கு வந்த சோதனையை பாருங்க!

சுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர்.

இவர் தன் உயிருக்கு ஆபத்து என்று திருவனந்தபுரம் காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று கூறியுள்ளார்.

அசுரன் படத்தில் இவரது நடிப்பைக் கண்டு அனைவரும் மெச்சிக் கொண்டாடும் இவ்வேளையில் அவருக்கு இப்படியொரு சோதனையா..!

Facebook Comments

Related Articles

Back to top button