
செந்தில் ராஜன் இயக்கத்தில் விஜய் டிவி ராமர், பூஜா ஸ்ரீ, கலையரசன், சூப்பர் குட் சுப்ரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண்,பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ”அது வாங்குனா இது இலவசம்”.
இப்படத்திற்கு அர்வின் ராஜா இசையமைத்திருக்கிறார். விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்
படத்தினை ஸ்ரீஜா சினிமாஸ் மற்றும் எஸ் கே செந்தில் ராஜன் தயாரித்திருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக வரும் ராமர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர். போலீசில் சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு உடனே வெளிவந்து மீண்டும் அதே வேளையில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில் நாயகி பூஜாஸ்ரீயை சந்திக்கின்றனர் ராமரும் அவரது நண்பரும். இருவரும் பூஜாஸ்ரீயை காதலிக்க யாருக்கு நாயகி என்ற போட்டி நிலவுகிறது இருவருக்குள்ளும்.
இந்த சமயத்தில் நான்கு இளைஞர்கள் இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று நாயகி பூஜாஸ்ரீ வேறொரு அவதாரம் எடுக்கிறார். அது என்ன அதனால் விஜய் டிவி ராமரும் அவரது நண்பர்களும் பாதிக்கப்பட்டார்களா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் விஜய் டிவி ராமர் விஜய் டிவியில் செய்து வந்த காமெடியை இதிலும் பிரதிபடுத்தி இருக்கிறார். ஆங்காங்கே சற்று சிரிக்க வைத்திருந்தாலும், அநேக காட்சிகளில் கோபத்தை வர வைக்கும் படியான காமெடிகளை தான் கொடுத்திருக்கிறார்.
இவருடன் நண்பர்களாக நடித்த இருவருக்கும் நடிப்பில் பெரிதான ஈர்ப்பு இல்லை. மேலும் அனுபவ நடிகர்களான சூப்பர் சுப்பிரமணி, சம்பத், மீசை ரமேஷ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக அழகாக செய்து முடித்து இருக்கின்றனர்.
நாயகி பூஜாஸ்ரீ கொடுத்த வேலையை மிக நிறைவாக செய்திருக்கிறார். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு ஒரு கட்டத்திற்கு மேல் விஸ்வரூபம் இருக்கும் கதாபாத்திரமாக பூஜாஸ்ரீ தனது கேரக்டரை உள்வாங்கி நடித்து அசத்தியிருக்கிறார்.
அரவிந்த்ராஜ் இசையமைப்பில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து செல்கிறது. ஒளிப்பதிவாளர் விக்னேஷ் மலைசாமி ஒளிப்பதிவில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தொகுப்பாளர் ஒரு முறைக்கு இரண்டு முறை கதையை நன்றாக உள்வாங்கி காட்சிகளை இன்னும் அழகாக சேர்த்திருக்கலாம்.
இளம்பெண்களை கடத்தி கொடூரமாக கொல்வது திருட்டு வேலைகளை செய்வது என இரண்டு குற்றங்களை படத்தில் வைத்து அதற்கான தீர்வையும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். கதையில் சற்று மாற்றம், திரைக்கதையின் ஓட்டம், வசனங்கள் என மூன்றிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் இயக்குனர்.
மொத்தத்தில்,
அது வாங்குனா இது இலவசம் – ஆவரேஜ்





