Spotlightசினிமா

”மாஸ்டர்” பட தயாரிப்பாளர் தயாரிக்கும் “அழகிய கண்ணே”!

பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவர் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்னேஹா பிரிட்டோ . இவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 12 தேதி அழகிய கண்ணே படத்தின் பூஜை போடப்பட்டது.பிரிட்டோ அவர்களின் மனைவி விமலா பிரிட்டோ அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 15 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது .

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் – R.விஜயகுமார்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் – வைரமுத்து
இசை – N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத் தமிழன்
நடனம் – ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Facebook Comments

Related Articles

Back to top button