Spotlightசினிமா

வைரலாகும் “பகாசூரன்” பட பாடல்

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G.

இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.

இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் , மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படம் வருகிற 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் “ஆனந்தம் கூத்தாடும் ” என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button