
ஃபயர் படத்திற்குப் பிறகு நடிகர் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் தான் ‘ரன்னர்’.
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர்.
இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய திரைப்படங்கள் ‘பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’.
மகாசிவராத்திரி நாளை முன்னிட்டு, நடிகர் சிலம்பரசன் TR, ‘ ரன்னர் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்.
உலக அளவில் உள்ள பல்வேறு ஸ்பிரிண்டர்களின் (வேக ஓட்ட வீரர்கள்) (Sprinters) உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளது.
இயக்குநர் சிதம்பரம் A அன்பழகன் இப்படம் குறித்துக் கூறும்போது:
“எனக்கு பல ஆண்டுகளாக பாலாஜி முருகதாஸை தெரியும் . அவரது கடின உழைப்பும், ஒழுக்கமான வாழ்க்கை முறையும் எப்போதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். குறிப்பாக, இத்திரைப்படத்துக்காக கடந்த 6 மாதங்களாக அவர் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து தீவிரமாக வேக ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். இரவு 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு, காலை 5.30 மணிக்கு தடகள பயிற்சியில் இறங்குவது அவரது தினந்தோறுமான அட்டவணையாக உள்ளது. அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.”
தயாரிப்பாளர்கள் காலெப் மற்றும் கல்வின் கூறும்போது:
“நடிகர் சிலம்பரசன் TR, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உருவாக்கியிருக்கிறது . அவரது ஆதரவால் இப்படத்துக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. இளைஞர்களை உற்சாகப்படுத்தும் தனித்துவமான கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் எங்களின் முழு முயற்சியையும் சிறப்பையும் கொடுத்திருக்கிறோம். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.”
தொழில்நுட்பக் குழு:
இயக்கம்: சிதம்பரம் A அன்பழகன்
ஒளிப்பதிவு: துரை ராஜேஷ் கண்ணன்
எடிட்டிங்: T M திலிப் குமார்
இசை: தர்ஷன் ரவி குமார்
கலை: ராஜா A
ஸ்டண்ட்: ஓம் பிரகாஷ்
மேக் அப்: தசரதன் @ டாஸ்
ஸ்டைலிஸ்ட்: ஓஷினோ
மேனேஜர்: ரவி முத்து ELK
தயாரிப்பு: காலெப் மற்றும் கல்வின்
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: யுவராஜ் D
பப்ளிசிட்டி டிசைனிங்: செல்வா
ஸ்டில்ஸ்: சுதர்ஷன்
தகவல் தொடர்பாளர் (PRO): ரேகா
‘Runner’ விரைவில் திரையரங்குகளில் பறக்கத் தயாராகி வருகிறது.




