
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் : மீன்பிடி உபகரணங்கள், ஜிபிஎஸ் கருவி உட்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கடற் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
கருனாநிதி – எம்ஜிஆர் நட்பை அரசியலாக்காமல் எம்ஜிஆர் புகழ்பாடும் விழாவாக நூற்றாண்டைக் கொண்டாடுங்கள்.அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது கருணாநிதி எம்ஜிஆர் நட்பு – முக.ஸ்டாலின்
தமிழகத்தில் ஒருநிமிடம் கூட மின்வெட்டு இல்லை – அமைச்சர் தங்கமணி.
கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி முக.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? – முக.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயகுமார்.
தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூவத்தூரில் நடந்தவற்றை கூற தயார்.போலீசார் என் மீது வழக்குப்பதிய மேற்கொண்ட வேகத்தை மக்கள் பணியில் காண்பிக்க வேண்டும் – நடிகர் கருணாஸ்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நடைமுறைகளைத்தான் பின்பற்றினோம்.
டஸ்ஸால்ட்- HAL நிறுவனங்கள் இடையே எந்த ஒப்பந்தமும் போட நடவடிக்கை எடுக்கப்படவில்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மீட்கப்பட்ட சிலைகளை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்க எந்த தடையும் இல்லை, ஆனால் அரசை பொன் மாணிக்கவேல் அணுகவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்.
எல்லாம் பேசிவிட்டு அட்மின் மீது பழி போடுவது தான் இப்போதைய டிரெண்ட் -அரசியல் தலைவர்கள் பற்றி நடிகர் விஜய் சேதுபதி மறைமுக விமர்சனம்.
தமிழகத்தின் தற்போதைய சூழலை பார்த்தால், இனி வரும் தேர்தலை போராக பார்க்க வேண்டும் – திமுக மகளிரணி கூட்டத்தில் கனிமொழி எம்பி
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஒரு வாரத்தில் அமைக்காவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.
டெல்லியில் எழுச்சிமிக்க கல்விக்கான கல்வியியல் தலைமை உருவாக்க மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு : 350 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்பு.
சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக கலந்து கொள்ளவில்லை.நாகரிகத்தோடு விழா நடக்காது – திமுக பொருளாளர் துரைமுருகன்.
சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டு முறைகளை பாரம்பரியமாக அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசியலில் பா.ஜ.க. மையப் புள்ளியாக இருக்கிறது.யாருக்கு பின்னாடியும் பாரதிய ஜனதா கட்சி இல்லை முன்னோடியாகத்தான் இருக்கிறது – மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என கூறியதன் மூலம் திருமாவளவன் எங்களுடன் நெருங்கி வருகிறார் – அமைச்சர் ஜெயக்குமார்.
இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்மீதான வழக்கில் உண்மை நின்றது நீதி வென்றது – சிறையிலிருந்து விடுதலையான நடிகர் கருணாஸ் பேட்டி.
பெரம்பலூர் அருகே இடி தாக்கியதில் 12-ம் வகுப்பு மாணவர் பலி.
அம்மாவின் சாவில் மர்மம் உள்ளது என விசாரணை கமிஷன் அமைத்தனர்.1 வருடம் ஆகியும் விசாரணை நிறைவு பெறவில்லை – தங்கத் தமிழ் செல்வன் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர்.
2016ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதால், தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது, பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை – சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை யில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த கலவரம் காரணமாக 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
தழிகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும்.சராசரி அளவை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம்.
அக்டோபர் 4,5-ம் தேதிகளில் இந்தியாவில் ரஷ்ய அதிபர் புடின் சுற்றுப்பயணம்.
புதுக்கோட்டை: விராலிமலை அருகே அதிகாலையில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்றபோது கார் டயர் வெடித்து விபத்து, தாசில்தார் பார்த்திபன் உயிரிழப்பு.
போடி அணை பிள்ளையார் அணைகட்டில் வெள்ளப்பெருக்குபொதுமக்கள் குளிக்க தடை.
ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால், கொங்கா்பாளையம், கள்ளியங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
தேனி கும்பக்கரை அருவி நீர்வரத்து அதிகரிப்பால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயத்தில் சபரிமலைக்கு செல்லப்போவதில்லை என்று பெண்கள் கையில் அகல் விளக்கு ஏற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு.
வடமாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறிய ரோகிங்கியாக்கள் கேரளாவுக்கு படையெடுப்பு : போலீஸார் சோதனை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு எதிரொலி: தூத்துக்குடி அனல் மின் நிலைய 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு.
தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 12% அதிகமாக இருக்கும்.தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.





