தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் கனடா நாட்டில், டொரோண்டோ மாநகரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் இவர் மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் பல தமிழ் பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.
இப்படி இவர் வெளியிட்டுள்ள பல பாடல்களை உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் பார்த்தும், பாராட்டியும் வருகின்றனர். குறிப்பாக பிரபல முன்னணி இசையமைப்பாளர்களும் பாராட்டியுள்ளனர்.
தற்போது இவர் தேன் நிலவு படத்தில் கண்ணதாசன் வரிகளில் உருவான பாட்டு பாடவா என்ற பாடலுக்கு மறு உருவாக்கம் செய்து இருக்கிறார். இவர் தயாரித்து வெளியிட்ட சொன்னது நீதானா பாடல் பின்னணி பாடகி திருமதி பி. சுசீலாவையே கவர்ந்துள்ளது.
பழைய பாடல்களை அதன் தரம் குறையாது புதிய சுவையுடன் வடிவமைத்து வழங்குவதை பிரபல பின்னணி பாடகி பி சுசீலா பாராட்டி வாழ்த்தியுள்ளார். பாட்டு பாடவா பாடலை நடிகர் பாண்டியராஜன் அவர்களும் மிக அருமையாக உள்ளதென்று ரசித்து பாராட்டியுள்ளார்
கனடிய நாடு இசை குழுவினரையும் இணைத்து கொண்டு பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியின் நெறியாள்கையில் பிரமாண்டமான அரங்கில், தனக்கே உரிய தனித்திறமையால் பல பாடலை அற்புதமாக பாடி பதிவு செய்து வரும் செந்தில் குமரன், அடுத்தடுத்து 7 பாடல்களை பாடி வெளியிட இருக்கிறார்.