
கொரோனா ஊரடங்கிற்கு பின் சினிமா மீண்டும் பழைய நிலைக்கு வராமல் இருந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வெளியானது.
பொங்கல் கொண்டாட்டமாக வெளிவந்த இப்படம் திரையரங்கை ரசிகர்களால் நிரப்பியது.
சிறிது நாட்கள் திருவிழா போல் களைகட்டிய திரையரங்குகள் மீண்டும் வெறிச்சோடியானது. ஒவ்வொரு காட்சிக்கும் 5 டிக்கெட்டுகள் விற்பனையாவதே சாதனையாக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இயக்குனர் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘சக்ரா’ படம் வெளியானது. வெளியான முதல் நாளே நல்ல ஒரு விமர்சனத்தை பெற்றதால், தொடர்ந்து சினிமா ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளின் காட்சிகள் நல்ல ஒரு ரிப்போர்ட்டை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் சக்ரா படத்திற்கு தான் கூட்டம் அலைமோதுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.