
சூர்யா நடித்து விரைவில் வெளிவர இருக்கிறது சூரரைப் போற்று. இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இவரது அடுத்த படமாக ‘அருவா’ உருவாக இருக்கிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருக்கிறார்.
ஆறு, வேலு, சிங்கம் I,II, III என சூர்யாவை வைத்து 5 படங்களை இயக்கிய ஹரி, ஆறாவது முறையாக அவரோடு இணைகிறார்.
விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
டி இமான் இசையமைக்கிறார். வரும் தீபாவளிக்கு இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
Facebook Comments