Spotlightவிளையாட்டு

ஐபிஎல் 2018: ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி!

சென்னை: 11-வது ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. மிகப் பெரிய மக்கள் போராட்டத்துக்கு இடையே இந்தப் போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லயின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த்த சுனில் நரேன் இந்த முறை 2 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். லயின் 22 ரன்களுடனும் உத்தப்பா 29 ரன்களுடனும் ரானா 16 ரன்களுடனும் வெளியேறினர்.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் ரஸ்ஸல் சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ரஸ்ஸல் மைதானத்தின் நான்கு புறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்தப் போட்டியில் மட்டும் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 11. கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடிய ரஸ்ஸல் 36 பந்துகளில் 88 ரன்களை குவித்தார்.

தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சனும் அம்பட்டி ராயுடுவும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஷேன் வாட்சனும் அம்பட்டி ராயுடுவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு ஒரு வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஷேன் வாட்சன் தனது நேர்த்தியான ஷாட்களை ஆட ஆரம்பித்தார். 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஷேன் வாட்சன் விளையாடி வருகிறார். அம்பட்டி ராயுடு 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். ரெய்னாவும் 14 ரன்களுடன் அவுட் ஆக களத்தில் கேப்டன் எம்.எஸ். தோனியும் பில்லிங்க்ஸூம் நிதானமாக விளையாட ஆரம்பித்தனர்.

அதே சமயத்தில் சாம் பில்லிங்க்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. சாம் பில்லிங்க்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

19.5 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button