Spotlightசினிமா

தொடங்கியது சிரஞ்சீவியின் அடுத்த பட படப்பிடிப்பு !

சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′ திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பவன் கல்யாண் ‘கிளாப் போர்டு’ – ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார்.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

நடிகர்கள் : ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து&  இயக்கம் : பாபி கொல்லி

தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா

தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்

இசை : எஸ். தமன்

திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி

கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி

ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி

வசனங்கள் – பானு & நந்து

நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

Facebook Comments

Related Articles

Back to top button