Spotlightசினிமா

ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்… “இரவின் நிழல்” படத்தை புகழ்ந்த முதல்வர் மு க ஸ்டாலின்!

இரா பார்த்திபன் இயக்கி நடித்த நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் தான் “இரவின் நிழல்”. இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
பல நட்சத்திரங்களும் பிரபலங்களும் இப்படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரவின் நிழலை பார்த்து பார்த்திபனை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், இன்று இப்படத்தை கண்டுகளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்திபனை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
எதிலும் தனிப்பாணி – அதுதான் பார்த்திபன்
ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!
இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!
Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்! ” என்று கூறியுள்ளார்.
Facebook Comments

Related Articles

Back to top button