Uncategorized

ஜெய்பீம் படத்திற்கு பிறகு ஓடிடி’யில் புது சாதனை படைத்த ”மாமனிதன்”!!

விஜய் சேதுபதி, குரு சோமசுந்தரம் மற்றும் காயத்ரி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “மாமனிதன்”.

குடும்பங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இப்படம், பெரும் வெற்றி பெற்றது. அழகான வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியதாக இயக்குனர் சீனு ராமசாமியை பலரும் பெரிதாக பாராட்டினார்கள்.

இப்படத்தினை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார். ஆர் கே சுரேஷ் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்படம் வெளியான சிறிது நாட்களிலேயே சுமார் ஒரு கோடி நிமிடங்கள் வரை பார்க்கப்பட்டு ஆஹா ஓடிடி தளத்தில் புது சாதனை படைத்தது.

தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது ஜெய் பீம். இப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக “மாமனிதன்” இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நற்செய்தியை படக்குழுவிற்கு பாராட்டாக அறிவிக்கப்போகிறது ஆஹா நிறுவனம்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close