Spotlightசினிமா

கோமாளித்தனம் செய்த ‘கோமாளி’… ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய படக்குழு!

வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. சம்யுக்தா, யோகிபாபு, சாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற 23 வயது வாலியர் இயக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே, பாடல்கள் வெளியாகி நல்ல ஹிட் அடித்த நிலையில், ட்ரெய்லர் நேற்று வெளியானது.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த கோமாளித்தனமாக டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த டிரைலரில் கடைசி நொடியில் கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி, யோகிபாபுவிடம் இது எந்த வருடம்- என கேட்கிறார். அதற்கு 2016 என்கிறார் யோகிபாபு.

ஜெயம் ரவி அவரின் பதிலை மறுக்கவே, யோகிபாபு அதை பதிவு செய்ய ரஜினியின் அரசியல் வருகை பற்றிய அறிவிப்பு வீடியோவை காட்டுகிறார்.

அதில் கடந்த 2017ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி பேசுவதாக உள்ளது. இது ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேசியிருந்தார்.

அதாவது காட்சிப்படி 2016 என்று சொல்லும்போது ரஜினி பேசிய 2017 ஆம் ஆண்டு இறுதி நாள் வீடியோ எப்படி 2016ல் வர முடியும்? இது கூட தெரியாமல் அவர்கள் காட்சியை வைத்துள்ளனர். இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் தற்போது கோமாளி படக்குழுவினரை கலாய்த்து வருகின்றனர்.

மேலும், அரசியலாக இருக்கட்டும், படமாக இருக்கட்டும் ஒரு உச்சம் பெற்ற நடிகரை பற்றி பேசினால் ட்ரெண்ட் ஆகி விடலாம் என்ற ஒரு மட்டமான போக்குத்தன்மை நிலவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 1996ல் அரசியலுக்கு வருவதாக எந்த ஒரு வாக்குறுதியும் ரஜினி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button