Spotlightசினிமா

கான் சிட்டி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு,  வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.

*தொழில்நுட்ப குழு*

இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: Power House Pictures (பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்)
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Facebook Comments

Related Articles

Back to top button