
ஹிப் ஹாப் ஆதி நடிக்க அறிமுக இயக்குனர் அஷ்வின் ராம் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது “அன்பறிவு”.
மிகப்பெரும் நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தமிழ் சினிமாவிற்கு நல்ல நல்ல தரமான படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில், 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படமே கடைசியாக சத்ய ஜோதி நிறுவனத்துக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்த படமாக இருக்கிறது.
ஏனென்றால், அதன்பிறகு வெளிவந்த தனுஷின் பட்டாசு, ஹிப் ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம் என்ற இரு படங்களும் பொருளாதார ரீதியாக தோல்வியை சந்தித்தது.
தற்போது, மீண்டும் தனுஷை வைத்து மாறன் படத்தை இயக்கி வருகிறது சத்ய ஜோதி நிறுவனம்.
இந்நிலையில், தொடர் தோல்வியை கண்டு வரும் சத்ய ஜோதி நிறுவனம், பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வரவே “அன்பறிவு” படத்தினை ஓடிடி தளத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தனுஷின் மாறன் படத்தினையும் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாகவும் ஒரு செய்தி உலாவிக் கொண்டு இருக்கிறது.
மிகப்பெரும் நடிகர்களை வைத்து படத்தினை தயாரித்து வரும் சத்ய ஜோதி நிறுவனம், அப்படங்களின் ப்ரோமோஷன் பணிகளை சரிவர கவனிக்காததே தொடர் தோல்விக்கு காரணம் என்கின்றனர்.
மிகப்பெரும் இளைஞர்கள் பட்டாளத்தை தனது ரசிகர்களாக வைத்துள்ள ஹிப் ஹாப் ஆதி, தொடர்ந்து இரு படங்கள் தொல்வியடைந்ததை அடுத்து, இப்படத்தினையாவது (அன்பறிவு) ரசிகர்களுக்கு ஒரு வெற்றி படைப்பாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இருந்தாலும், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சரிவர இல்லாத காரணத்தினால், படத்திற்கு போதுமான வரவேற்பு இதுவரை கிட்டவில்லை.
இனி வரும் காலங்களில், சத்ய ஜோதி நிறுவனம் ப்ரோமோஷன் பணிகளில் தனி கவனம் செலுத்தி, விரைவில் மீண்டும் வெற்றிப்படிக்கட்டுகளில் பயணிக்கும் என்பதை நம்புவோம்..





