Spotlightஇந்தியாதமிழ்நாடு

கொரோனா எதிரொலி: கிராமங்களில் வீடுகளில் மஞ்சள் நீர் தெளிப்பு!

லகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பல முன் நடவடிக்கைகள் எடுத்தும் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் மஞ்சள் பொடிகள் கலந்து நீரை தெளித்தும், வேப்பிலை கட்டியும் கிருமிகளை  விரட்டுகின்றனர்.,

அதுமட்டுமல்லாமல், உப்பு கரைசலை வீட்டின் முன் வைத்து வீட்டிற்குள் வருபவர்களை அதில் கை கழுவி வர சொல்லும் பழக்கத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.

சாயல்குடி, கடலாடி ஆகிய பகுதிகளில் இம்முறை பழக்கம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

எல்லாம் கொரோனாவின் எதிரொலி தான்.

Facebook Comments

Related Articles

Back to top button