
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்கான தரவுகளை சேகரிக்குமாறு, மாநில அரசுகளை மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கௌபா கேட்டுக் கொண்டுள்ளார்.
உரிய கொரோனா தடுப்பூசி கிடைத்ததும் அவற்றை பயன்படுத்துவதற்காக, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை ராஜிவ் கௌபா ஆய்வு செய்தபோது இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை விரைவாகவும், திறம்படவும் விநியோகிப்பதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், முன்னுரிமை பட்டியலை தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
களப்பணியாளர்களுக்கும் அரசு பணியாளர்களுக்கும் முதலில் கொரோனா தடுப்பூசியை தர பல மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
Facebook Comments