
கண் அசைவினால் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களை அடக்கியவர் ப்ரியா வாரியர். இவர் நடித்த “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் தான் இந்த காட்சி இடம் பிடித்தது. பள்ளி காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி வெளிவந்துள்ளது.
+1 மற்றும் +2 பள்ளியில் நடக்கும் இளமை காதல் தான் இந்த “ஒரு அடார் லவ்”.
ரோஷன் மற்றும் நூரின் இருவரும் நல்ல நண்பர்கள். இதில் தன் தோழி நூரின் உதவியுடன் பிரியாவுக்கு ரூட்டு விடுகிறார் ரோஷன்.
பின்னர் இருவரும் (ரோஷன் & நூரின்) காதலிக்க தொடங்குகின்றனர். ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் ரோஷனை பிரிந்து செல்கிறார் பிரியா. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார் ரோஷன்.
மற்றொரு பெண்ணை காதலிப்பது போல் நடித்தால் ப்ரியா மீண்டும் உன்னை காதலித்து விடுவாள் என உடன் இருந்த நண்பர்கள் ரோஷனுக்கு ஐடியா கொடுக்க, மற்றொரு பெண்ணாக நூரினையே காதலிப்பது போல் நாடகமாடுகிறார்கள். நாடகமாக ஆரம்பித்த காதல் விளையாட்டு உண்மையான காதலாக மாறி விடுகிறது.
அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை….
படத்தின் நாயகனாக நடித்துள்ள படத்தின் கதையோடு ஒன்றி நடித்துள்ளார். கதைக்கேற்ற நாயகனாக படம் முழுவதும் வந்திருக்கிறார்.
கண் சிமிட்டழகி ப்ரியா வாரியரின் நடிப்பு அனைவரையும் பரவசப்படுத்துகிறது. கண் அசைவினால் இளைஞர்களின் கனவு கண்ணியாக மாறி விட்டார்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆரம்பித்து இறுதி வரை நடிப்பிலும் அழகிலும் நம்மை கட்டி போடுபவர் நூரின் தான். நட்பு காதலாக மாறும் தருணத்தில் சரி, நட்பாக இருக்கும் வரை பார்த்த பார்வைக்கும் காதலாக மாறும் போது பார்க்கும் பார்வைக்கும் ஏக மாற்றத்தை கொடுத்து பரவசப் படுத்திவிட்டார் நூரின்.
தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தில் வரும் கேர்க்டரான குண்டு மாணவன், டீச்சரை சைட் அடிக்கும் மாணவன், கணக்கு ஆசிரியர், என அனைவரும் கலகலப்புக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.
பாடல்களும் பின்னனி இசையும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளன. ஒளிப்பதிவு படத்திற்கு பலம்..
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் பாடம்
ஒரு அடார் லவ் – பள்ளி காதல் கலாட்டா…




