179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
ஷேன் வாட்சன் மற்றும் டூப்லஸிஸ் ஆகியோர் இணைந்து ஆட்டத்தை துவங்கினர்.
புவனேஷ்குமாரின் முதல் ஓவரில் திணறிய வாட்சன், ஒரு பந்தை கூட அடிக்காமல் மெய்டனாக்கினார். துவக்கம் சென்னை அணிக்கு மோசமாக இருந்தது 4 ஓவருக்கு 14 ரன்கள் என்ற நிலையில் டூப்லஸிஸ் ஆட்டமிழந்தார்.
பின்னர் வாட்சனுக்கு ஜோடியாக சுரேஷ் ரெய்னா களத்தில் இறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடந்தது. 133 ரன்கள் என்ற நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து அம்பதி ராயுடு, வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி சென்னை அணியை வெற்றிபெறச் செய்தனர். 181 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி, சன்ரைசர்ஸ் அணியை வென்றது. 117 ரன்கள் குவித்த வாட்சனுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் வழங்கப்பட்டது.